Home தென்னிலங்கைச் செய்திகள் தமிழை எதிரணி கொச்சைப்படுத்துகிறது – அமைச்சர் சந்திரசேகர் கவலை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தமிழை எதிரணி கொச்சைப்படுத்துகிறது – அமைச்சர் சந்திரசேகர் கவலை!

Share
Share

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

‘எனது தாய் மொழி தமிழ். அந்த மொழியிலேயே நான் பதிலளித்தேன். கேட்கப்பட்ட கேள்விக்கு – தெளிவாக விளக்கமளித்தேன். ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் தமிழ் மொழியை பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். தமிழ் மொழியை கொச்சப்படுத்துகின்றவர்களாக மாறியுள்ளனர்.

நானும் இந்த பாராளுமன்றத்தில் பல வருடங்கள் இருந்துள்ளேன். ஒருவரின் சிரிப்பு மற்றும் நக்கலை பார்க்கும்போது அவர்கள் என்ன கூற வருகின்றார்கள் என்பது தெரியும்.

தமிழ் மொழியில் பதிலளிக்கும்போது அந்த மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.” என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

2029 இல் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்!

2029 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ...

நவாலியில் 147 பேர் படுகொலை; 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான குண்டுத் தாக்குதலின் 30 ஆம் ஆண்டு...

இலங்கைக்கு 30 வீதம் வரி அறிவித்தார் ட்ரம்ப்!

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

செம்மணியில் இன்று 7 எலும்புக்கூடுகள் அடையாளம்! – ஆடைகள், பாதணிகள் போன்ற தடயப் பொருட்களும் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 7 எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்...