Home தென்னிலங்கைச் செய்திகள் தனியார் துறை ஊழியர்களின் வேதன அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் வேதன அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Share
Share

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கமைய, அரச துறையில் ஊழியர்களின் வேதன அதிகரிப்புக்கு இணையாகத் தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டம், 2025 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம், மற்றும் 2025 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம், 2025.04.01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 2025.07.22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய 2025.04.01 ஆம் திகதி முதல் மாதாந்த குறைந்தபட்ச வேதனம் 17,500 ரூபாவிலிருந்து 27,000 ரூபாய் வரை அதிகரிக்கப்படுவதுடன், 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மாதாந்த குறைந்தபட்ச வேதனம் 30,000 வரை அதிகரிக்கும்.

இவ்வாறு அதிகரிக்கப்பட்ட மாதாந்த குறைந்தபட்ச வேதனமானது, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி, மேலதிக நேரக் கொடுப்பனவு, பணிக்கொடை, மகப்பேற்றுக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவு போன்ற அனைத்து சட்டரீதியான கொடுப்பனவுகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

மேற்கூறிய ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்காக தொழில் ஆணையாளர் நாயகம் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த ஏற்பாடுகள் தொடர்பாக பத்திரிகை விளம்பரத்தின் மூலம் ஏற்புடைய தரப்பினர்களுக்கு தற்போது அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, இது தொழில் அமைச்சரால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஏற்பாடுகள் சரியான வகையில் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி...

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவத் தயார் – சீனப் பிரதமர்!

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதியளித்துள்ளது. மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...

மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும்...

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் சிக்கினார்!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச்...