செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அந்நாட்டுப் பிரமரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
பிரித்தானியாப் பிரதமர் அலுவகம் முன்பாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இந்தக் கவனவீர்ப்புப் போராட்டமும், மகஜர் கையளிப்பும் இடம்பெற்றது.
இதன்போது, செம்மணி மாத்திரமல்லாது வடக்கு, கிழக்கில் உள்ள 100 இற்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மகஜர் கையளிக்கப்பட்டது.
இதில், புலம்பெயர் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



Leave a comment