Home தாயகச் செய்திகள் செம்மணி அகழ்வுப் பணிகளில் தாமதம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

செம்மணி அகழ்வுப் பணிகளில் தாமதம்!

Share
Share

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான வழக்கு நேற்று (13) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அகழ்வு பணிக்காக வரவுசெலவுதிட்டம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு கோர பட்ட நிதியை நீதி அமைச்சு விடுவித்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் புதைகுழி காணப்படும் பகுதிக்கு சென்று நேரில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என மன்றில் தெரிவிக்கப்பட்டு, நேற்று மாலை 03 மணியளவில் புதைகுழி பகுதிக்கு நீதிபதி தலைமையில் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் போது, யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக புதைகுழி காணப்படும் இடத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன், அப்பகுதிகள் சதுப்பு நிலமாகவும் காணப்பட்டது .

அதனால், அகழ்வு பணிகளை தற்போது முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்பட்டமையால், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பில் தீர்மானிக்க எதிர்வரும் 03ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் போது 240 மனித என்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 239 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டத்திற்காக அனுமதிக்கப்பட்ட 45 நாட்கள் நிறைவடைந்தமையால், அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், புதைகுழி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகள் மற்றும் நிபுணத்துவ அறிக்கைகளின் பிரகாரம் அப்பகுதியில் மேலும் மனித என்பு கூட்டு எச்சங்கள் காணப்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதனால் , குறித்த பகுதியில் மேலும் அகழ்வு பணிகளை முன்னெடுக்க 08 வார கால பகுதி அனுமதிக்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் கோரியதன் அடிப்படையில், மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான செலவீன பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டதை அடுத்து, பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது நீதி அமைச்சினால் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அதிக தொகை பணம்; சுன்னாகம் பொலிஸார் இருவருக்கு இடமாற்றம்!

சட்டவிரோதமான முறையில் பணத்தை ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு...

இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவிடம்!

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் செவ்வாய்க்கிழமை (15) கொழும்புக்கு...

தென் கடல் பகுதியில் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51...

கிளிநொச்சியில் 40 எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை...