“யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. மாறாக தேவையான ஒத்துழைப்புகளே வழங்கப்பட்டு வருகின்றன.” – என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் நீதிமன்றக் கண்காணிப்புடன் இடம்பெற்று வருகின்றன. தேவையான வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.
வடக்கில் தேசிய மக்கள் சக்திக்கே அதிக வாக்குகள் உள்ளன. நிச்சயம் நாம் நீதியை நிலைநாட்டுவோம்.
தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை எப்படியாவது மீள ஏற்படுத்துவதற்கு ராஜபக்ஷக்கள் முற்படுகின்றனர்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைக்கு நாம் எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கூட ஒத்துழைப்பு கோரியுள்ளோம்.” – என்றார்.
Leave a comment