வாள் வெட்டுச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சின்னத்தம்பி வடிவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ். வடமராட்சி கிழக்கு , சுண்டிக்குளம் பகுதியில் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் வாடி அமைத்து கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாடியில் இருந்த இரு கடற்றொழிலாளர்களுக்கிடையில் கருத்து மோதல் ஏற்பட்டு வாள் வெட்டில் முடிந்தது.
அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a comment