சிறைச்சாலைகளில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா சுற்று வட்டத்தில், எதிர்வரும் 24 ஆம், 25 ஆம் திகதிகளில், இந்தநினைவேந்தல் நடத்தப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தங்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், பல ஒடுக்குமுறை சட்டத்தின் பெயரில் சிறையிலடைக்கப்பட்டனர்.
அவர்களில் பலர், சிறைச்சாலைகளிலேயே கொல்லப்பட்டதுடன், மேலும் சிலர் இன்று வரையில் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.
எனவே, இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஊடாக, சிறைச்சாலைகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் அதேநேரம், இன்று வரை சிறையிலே வாடும் உறவுகளின் விடுதலையை வலியுறுத்த உள்ளதாகக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது
Leave a comment