Home தென்னிலங்கைச் செய்திகள் சர்வதேச தலையீடு தேவையில்லையாம் – வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சர்வதேச தலையீடு தேவையில்லையாம் – வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார்!

Share
Share

இலங்கைக்குச் சர்வதேச தலையீடு அவசியம் இல்லை எனவும், இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் செப்டெம்பரில் நடைபெறவுள்ளது. எனவே, மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்தது நல்லது. அவருக்கும் அறிக்கை முன்வைப்பதற்கு அது இலகுவானதாக இருக்கும். ஏனெனில் அவரால் விடயங்களை நேரில் அவதானிக்க முடிந்தது. நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டியுள்ளோம்.

பொருளாதாரப் பாகுபாட்டை நிவர்த்தி செய்தல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு காண முடிந்தது. நாம் எதையும் ஒளிக்கவில்லை. வெளிப்படைத் தன்மையுடன்தான் நடவடிக்கை இடம்பெறும்.

செப்டெம்பர் முதல் வாரமளவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது பற்றிய வர்த்தமானியை வெளியிடுவதே அரசின் இலக்காக உள்ளது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....

அரச பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை!

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம்...

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்....

இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம்!

நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் திங்கட்கிழமை (07) முதல் வெள்ளிக்கிழமை...