Home தென்னிலங்கைச் செய்திகள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்கும் ரோம் சட்டத்தில் இலங்கை ஒப்பமிட வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்குப் பரிந்துரை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்கும் ரோம் சட்டத்தில் இலங்கை ஒப்பமிட வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்குப் பரிந்துரை!

Share
Share

“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும் சர்வதேச பிரகடனத்தை ‘ரோம் சட்டம்’ என்பர். அந்தச் சட்டத்தை அங்கீகரித்து அதில் ஒப்பமிடுவது குறித்து இலங்கை அரசு பரிசீலிக்க வேண்டும்.” – இவ்வாறு இலங்கை அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கின்றது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் ஐவரும் சேர்ந்து இந்தச் சிபார்சை முன்வைத்துள்ளனர்.

ஐ.நாவின் காணாமல்போனவர்களுக்கான குழுவுக்கு இலங்கை அரசு இப்போது ஓர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அந்தக் கட்டத்தில், அதற்குச் சமாந்தரமான ஓர் அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அந்த அறிக்கையை நேற்று சமர்ப்பித்து வெளியிட்டுள்ளது.

அதிலேயே ரோம் சட்டத்தை ஏற்று ஒப்பமிடுமாறு இலங்கை அரசுக்குப் பரிந்துரைத்திருக்கின்றது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் தீர்வுக்கான வாக்குறுதியை உடன் நிறைவேற்றுங்கள் – அநுர அரசிடம் சஜித் அணி வலியுறுத்து!

“இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, புதிய அரசமைப்பு என்பன தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு...

வட்டுக்கோட்டை பொலிஸ் அதிகாரியை மாற்றக் கோரி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி கோரி, இன்றைய...

பதவி விலகுகிறார் கிதா கோபிநாத்!

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கிதா கோபிநாத் பதவி...

இளையோர் சுகநலக் கண்காட்சியும் விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வும்!

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள்...