Home தென்னிலங்கைச் செய்திகள் சட்டம் பாரபட்சமின்றி செயற்படுத்தப்படுகிறது – பிரதமர் ஹரிணி!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சட்டம் பாரபட்சமின்றி செயற்படுத்தப்படுகிறது – பிரதமர் ஹரிணி!

Share
Share

சட்டம் அனைவருக்கும் பொதுவான வகையில் பாரபட்சமின்றி செயற்படும் போது அதனை ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு என்று எவ்வாறு குறிப்பிடுவது. எதிர்க்கட்சிகளை இலக்காகக் கொண்டு நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. மக்களை இலக்காகக் கொண்டே ஆட்சிக்கு வந்துள்ளோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பதவி காலத்துக்குள் நிறைவேற்றுவோமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கம் ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படுவதாகவும், ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பல கல்வி முறைமையை பலவீனமடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஜனநாயகம் எங்கு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும்.

சட்டம் அனைவருக்கும் பொதுவான வகையில் பாரபட்சமின்றி செயற்படும் போது அதனை ஜனநாயகத்துக்கு விரோத செயற்பாடு என்று எவ்வாறு குறிப்பிடுவது.

பல கட்சி முறைமையை இல்லாதொழிக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. எதிர்கட்சிகளின் செயற்பாடுகளினால் தான் பல கல்வி முறைமை பலவீனமடையும். எதிர்க்கட்சிகளை இலக்காகக் கொண்டு நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. மக்களை இலக்காகக் கொண்டே ஆட்சிக்கு வந்துள்ளோம்.

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து இன மக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.நாட்டின் நிதி நிலைமையை கருத்திற் கொண்டு அனைத்து தரப்பினருக்கும் நிவாரணமளிக்கப்பட்டுள்ளது.

அரச துறை மற்றும் கல்வித்துறை மறுசீரமைப்புக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மக்களுக்கு குறிப்பிடவில்லை. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டு தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...