Home தென்னிலங்கைச் செய்திகள் கொழும்பில் அமெரிக்க கடற்படைக் கப்பல்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கொழும்பில் அமெரிக்க கடற்படைக் கப்பல்!

Share
Share

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் சண்டா பார்பரா (USS Santa Barbara) என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படையின் இந்த கப்பல் இன்று (16) காலை கொழும்பு துறைமுகத்துக்கு வந்த நிலையில், இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி அதனை வரவேற்றனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Littoral Combat வகைக் கப்பலான யுஎஸ்எஸ் சண்டா பார்பரா, அமெரிக்காவின் 7வது கடற்படைப் பிரிவைச் சேர்ந்த ஒரு கப்பலாகும்.

இந்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியின் போது, அதன் அங்கத்தவ குழுவினர்கள் நாட்டின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் 22ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

உலக முயற்சியாளர் தினத்தையொட்டி வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி

உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா பல்கலைக்கழகத்தின் முயற்சியாண்மை கற்கைகள் பிரிவின் மாணவர்கள் இணைந்து இன்று...

ஜனாதிபதியைச் சந்தித்தபுதிய பொலிஸ்மா அதிபர்!

புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...

நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்!

நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை தமது சமர்ப்பணங்களை நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத்...

மின்சாரசபையின் பொறியியலாளர்களில் 20 வீதமானோர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு!

இலங்கை மின்சார சபையின் (CEB) பொறியியலாளர்களில் 20% பேர் கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து,...