சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக, 97 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களைச் சட்டவிரோதமாகக் குவித்த குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு சந்தேக நபர்களுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது. வழக்கு வரும் வாரங்களில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
Leave a comment