கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மனநலம் பாதிக்கப்பட்டவரின் வாள் வெட்டுக்கு இலக்கான தாயும் மகனும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் தாயார் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நீதிமன்ற அனுமதியுடன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment