Home தென்னிலங்கைச் செய்திகள் கனடாவில் வேலை வாய்ப்பு; மோசடிக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கனடாவில் வேலை வாய்ப்பு; மோசடிக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

Share
Share

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று (9) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் பணியகத்தில் கைது செய்யப்பட்டார்.

சிங்ஹாரகே ஜனக சில்வா என்ற நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர் நிரந்தர வதிவிடத்திற்காக கனடாவில் குடியுரிமை பெற்றவர்.

குறித்த சந்தேக நபர் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பலரிடமிருந்து மோசடியாக பணம் பெற்றுள்ள நிலையில் மோசடியால் பாதிக்கப்பட்ட பத்து பேர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

அதன்படிஇ பணியகம் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்இ சந்தேகநபர் நேற்று பணியகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர்இ அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பிற்காக பணம் மோசடி செய்தல் மற்றும் மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (10) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

சீனாவில் பிரதமர் ஹரிணி!

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப்...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...