Home தாயகச் செய்திகள் கடையடைப்புக்கு ஆதரவில்லை – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கடையடைப்புக்கு ஆதரவில்லை – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு!

Share
Share

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது கடையடைப்புக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனி ஒரு அரசியல் கட்சியின் கடையடைப்பு அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவு வழங்க முடியாது.

கடையடைப்புக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ் தேசியம் சார்ந்த அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றுடன் கலந்துரையாடல்களை நடாத்தி இருக்க வேண்டும்.

அதன் பின்னரேயே ஒரு முடிவுக்கு வந்து பொதுவான திகதியில் கடையடைப்புக்கான அழைப்பை விடுத்திருக்க வேண்டும்.

இது எதுவும் இலலாமல் ஒரு கட்சியை சேர்ந்த ஒருசிலர் தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துவிட்டு அதற்கு ஆதரவுகோரும் பட்சத்தில் மாணவர் ஒன்றியமாகிய எம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது சுயமாக இயங்கும் ஒரு அமைப்பாகும். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும், இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களது காணிகள் மக்களிடமே மீளளிக்கப்பட வேண்டும், இராணுவத்தின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எம்மிடம் மாற்றுக் கருத்து இல்லை.

கடந்த காலங்களில் தமிழ் மக்களது உரிமை சார் பிரச்சினைகளுக்காக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக நாங்கள் குரல் கொடுத்தமை அனைவரும் அறிந்த விடயமே.

ஆனால் ஒரு சில தரப்பு தமது சுயலாபங்களுக்காக மேற்குறித்த விடயங்களை கையில் எடுத்து அரசியல் செய்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டோம், அதற்கு துணை போகவும் மாட்டோம்.

மேலும் பல்கலைக்கழகத்தில் நாளைய பாடநேர அட்டவணைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளன.

பாடங்கள் உரிய நேர அட்டவணையின்படி ஒழுங்காக நடைபெறும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வழமை போல கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஓமந்தையில் விபத்து! பெண் உட்பட்ட இருவர் மரணம்! 12 பேர் படுகாயம்!

வவுனியா மாவட்டம் ஓமந்தை பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் 12...

குமணனை 7 மணிநேரம்இன்று துருவியது ரி.ஐ.டி.!

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் சுயாதீன ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப்...

செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி பிரிட்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்! – பிரதமரிடம் மகஜரும் கையளிப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை...

பிள்ளையான் தலைமையில் செயற்பட்ட துப்பாக்கிதாரிகள் ஆறு பேர் கைதாகின்றனர்?

பல குற்ற சம்பவங்களில், பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணியாற்றியதாக...