கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பணிப்பாளராக அகிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளராக இருந்த ஜே.சுதாகரன், முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய மோகன் கிளிநொச்சி மாவட்டத் திணைக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அகிலன் அண்மையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் நடத்திய உதவிப் பணிப்பாளர்களுக்கான தேர்வில் சித்தியடைந்த இரு தமிழ் அதிகாரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment