நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்பிராந்தியங்கள், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குக் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், தற்போதைய மோசமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, கடலுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, அனைத்து கடற்றொழில் சமூகத்தினரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையான கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கடற்பகுதிகளில் கடலலையானது, 2.5 முதல் 3 மீற்றர் வரையில் மேல் எழக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment