Home தாயகச் செய்திகள் ஓமந்தையில் விபத்து! பெண் உட்பட்ட இருவர் மரணம்! 12 பேர் படுகாயம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஓமந்தையில் விபத்து! பெண் உட்பட்ட இருவர் மரணம்! 12 பேர் படுகாயம்!

Share
Share

வவுனியா மாவட்டம் ஓமந்தை பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிபயணித்த சிறிய ரக வாகனம் ஏ9 வீதியின் ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பார ஊர்தியில் மோதி தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.

விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.

விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் இருவர் மரணமடைந்ததுடன் ஏனையோர் படுகாயமடைந்திருந்தனர்.

இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் சாவடைந்துள்ளதுடன் 13பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பெண்கள் ஆறு பேர் சிறுவர்கள்.

உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த வயது33 , வயது30 என்று தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கடையடைப்புக்கு ஆதரவில்லை – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது கடையடைப்புக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன்...

குமணனை 7 மணிநேரம்இன்று துருவியது ரி.ஐ.டி.!

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் சுயாதீன ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப்...

செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி பிரிட்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்! – பிரதமரிடம் மகஜரும் கையளிப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை...

பிள்ளையான் தலைமையில் செயற்பட்ட துப்பாக்கிதாரிகள் ஆறு பேர் கைதாகின்றனர்?

பல குற்ற சம்பவங்களில், பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணியாற்றியதாக...