மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் – மயிலம்பாவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
28 வயது இளைஞன் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த உந்துருளி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, இன்று அதிகாலை விபத்துக்குள்ளானபோதே அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment