யாழ்ப்பாணம் – எழுவைதீவு கடற்பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான, கேரள கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பொதியை, சோதனையிட்டபோது, அதிலிருந்து சுமார் 38 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
எழுவைதீவு பகுதியில் கடற்படை கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதால், கடத்தல்காரர்கள் இந்த போதைப்பொருளைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, ஊர்காவற்துறை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Leave a comment