எம்.வி.சன்சி 15 ஆவது வருட நிறைவினையொட்டி நடாத்தப்படும் பொது அறிவுப்போட்டிக்கான பதிவுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள தமிழ் மாணவர்களின் தமிழ் வரலாறுகளை கற்பிக்கும் முகமாக நடாத்தப்படும் இப்போட்டிப்பரீட்சையானது மூன்று பிரிவுகளாக நடாத்தப்படுகின்றது.
8-12 வயது -இளவயது பிரிவு, 13-15 வயது மத்தியபிரிவும், 16-18 வயது மேற்பிரிவு என வயது அடிப்படையில் இப்போட்டிப்பரீட்சை இடம்பெறுகின்றது.
அத்துடன் தமிழர் வரலாற்று ஆவணக்கண்காட்சியும் இடம்பெறுகின்றது.
கீழ் வரும் இணைப்பின் ஊடாக தங்கள் பிள்ளைகளின் விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Leave a comment