Home தென்னிலங்கைச் செய்திகள் எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – ராஜிதவின் மகனுக்கு அமைச்சர் சமந்த பதில்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – ராஜிதவின் மகனுக்கு அமைச்சர் சமந்த பதில்!

Share
Share

“எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த நபரென்றால் எதற்காக ஒளிந்து விளையாட வேண்டும்.”

– இவ்வாறு ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்னவுக்கு அமைச்சர் சமந்த வித்யாரத்ன பதிலடி கொடுத்துள்ளார்.

தனது தந்தையைக் கைது செய்தாலும், செய்யாவிட்டாலும் இந்த ஆட்சியைக் கவிழ்ப்போம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு:-

“சட்டம் எவ்வாறு செயற்படும் என்பது எமக்குத் தெரியாது. அதில் நாம் தலையிடுவதும் கிடையாது. எனினும், கைது பயத்திலேயே ராஜித பதுங்கி இருக்கக்கூடும். சிறைச்சாலையில் இருப்பதை விடவும் ஒளிந்திருப்பது கஷ்டமாகவே இருக்கும். அந்தக் கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டு வரட்டும். சட்டம் தனது கடமையைச் செய்யும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

எனது தந்தை நிச்சயம் வருவார்! வரலாறு அவரை விடுவிக்கும்! – ராஜிதவின் மகன் தெரிவிப்பு! 

“எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர்...

கொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாது – அவர்களுக்குத் தண்டனை உறுதி என்கிறார் அமைச்சர் பிமல்!

“கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் – ராஜபக்ஷ தரப்பு  ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட...

இளம் யுவதி வெட்டிக்கொலை – தென்னிலங்கையில் கொடூரம்!

இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில்...

வடக்கு மனிதப் புதைகுழிகள் பற்றி விரைவில் உண்மைகள் வெளிவரும் – அரசாங்கம் அறிவிப்பு!

வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் விரைவில் உண்மைகள் வெளிவரும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன...