Home தென்னிலங்கைச் செய்திகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் விரைவில் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் விரைவில் கைது!

Share
Share

குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பல விடயங்கள் தற்போதைய விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளன. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பலர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள். விசாரணைகளின் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விவகாரம் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பல விடயங்கள் தற்போதைய விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயத்தில் குறிப்பிடப்பட்ட பெயர் மற்றும் தொடர்புடைய நபர்கள் விசாரணைகளின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள். வெளிநாடுகளில் உள்ளவர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. பல விடயங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. குற்றத்தின் இராச்சியமாகவே இருந்தது.

விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெறுவதால் தான் பல விடயங்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகள் நிறைவுபடுத்தப்பட்டு வெகுவிரைவில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழரசின் முடிவுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க யாழ். நீதிமன்றம் மறுப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக இடைக்காலத்...

மட்டு. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள்!

குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்குக் கனடா உதவும் – தேசிய மக்கள் சக்தியின் யாழ். எம்.பிக்களிடம் தூதுவர் உறுதி!

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்குக் கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என்று...

காணாமல் ஆக்கப்பட்டசகலருக்கும் நீதி வழங்கு – மன்னாரில் கையெழுத்து வேட்டை! (படங்கள்)

“சம உரிமைகளை வெல்வோம்! இனவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம்!!” எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம்...