தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள் இணைந்து நடத்திய இளையோர் சுகநலக் கண்காட்சி, விழிப்புணர்வு நடைபவனி என்பன வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் கவிஞர் அம்பி கலையரங்கில் மேடை நிகழ்வுகள் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பரா.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் வைத்து தாய்மார் கழகங்கள் இடையில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற தாய்மார் கழகங்களுக்கான கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
உயிர்கொல்லி போதைப்பொருள் மற்றும் வீதி விபத்துக்களில் இருந்து மீட்டெடுக்கும் விழிப்புணர்வுக்காக நடைபவனி தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி, தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை வரையில் இடம்பெற்றது. அதன் பின்னர் அங்கு ஆளுநரால் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுடன் யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரியின் அதிபர், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், யூனியன் கல்லூரியின் அதிபர் ஆகியோரும் பங்கேற்றனர்.


























Leave a comment