இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் பெறுமதி சேர் வரி விதிக்கப்படவுள்ளது.
2025 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டத்தின்படி, டிஜிட்டல் சேவைகளுக்கு இந்த வரி விதிக்கப்படவுள்ளதாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள நபரொருவருக்கு மின்னணு தளம் மூலம் சேவைகளை வழங்கும் வெளிநாட்டினர், இந்த டிஜிட்டல் சேவைகளுக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டிஜிட்டல் சேவைகளுக்கான வரி தொடர்பான வழிகாட்டல்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 12 மாதங்களில் 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சேவைகளை வழங்கியவர்கள், அல்லது கடந்த காலாண்டில் 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் இந்த பெறுமதிசேர் வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment