Home தாயகச் செய்திகள் இராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்ட நபர் தப்பிச் செல்லமுயன்றபோது முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கிப் பலி – – இப்படிக் கூறுகின்றது ஒட்டுசுட்டான் பொலிஸ்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்ட நபர் தப்பிச் செல்லமுயன்றபோது முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கிப் பலி – – இப்படிக் கூறுகின்றது ஒட்டுசுட்டான் பொலிஸ்!

Share
Share

முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகிய பின்னர் காணாமல்போன நிலையில் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர், நீரில் மூழ்கியே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் சிவநகரில் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப் படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்குச் சில நாள்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, 07.08.2025 ஆம் திகதியன்று இரவு வேளையில் அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுத்துச் செல்லதற்காக அதன் முகாம் வளாகத்தினுள் அனுமதியின்றி நுழைந்த ஐந்து பேரை விரட்டியடிப்பதற்காக முகாமிலுள்ள உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

அதில் தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய பொலிஸ் விசேட குழுவால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்படி நபர்கள் முகாம் வளாகத்தினுள் நுழைந்தபோது, முகாமிலுள்ள உத்தியோகத்தர்கள் அவர்களைக் கண்டு விரட்டியடிக்க முற்பட்ட போது, இதன் விளைவாக, உள்ளே நுழைந்தவர்கள் தாக்கப்பட்டது தெரியவந்ததன் காரணமாக சிப்பாய் ஒருவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், முகாமுக்குள் நுழைந்து திருட்டுச் சம்பவத்தை மேற்கொள்வதற்காக இந்தக் குழுவுக்கு உதவிய மேலும் இரண்டு சிப்பாய்களும் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரையும் 09.08.2025 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மூன்று சந்தேகநபர்களையும் 19.08.2025 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பாக வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் எந்தவித செல்வாக்கும் இல்லாமல், வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்பட்டு வருகின்றன.  

மேலும், ஒட்டுசுட்டான் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.” – என்றுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யானைகள் இறப்பு வீதத்தில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு வீதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது....

நாட்டின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததைவிட வேகமாக முன்னேற்றம் – மத்திய வங்கி ஆளுநர்!

நாட்டின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட வேகமாக முன்னேறி வருகிறது. அடுத்த 3 ஆண்டுக்குள் நாடு...

அரசுக்குள் குழப்பம் என்று கூறி வதந்தியைப் பரப்பாதீர்கள் – பிரதமர்!

“தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று...

துப்பாக்கிச் சூடுகளால் இவ்வருடம் இதுவரை 44 பேர் மரணம்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் 82 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார்...