இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி மன்னாரில் 2 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.
மன்னாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது தலை மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள 30 ஆவது காற்றாலை கோபுரத்துக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
Leave a comment