மீன்பிடிக்க வலையை வீசியபோது குளத்தில் தவறி வீழ்ந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
இதில், சாந்தபுரத்தைச் சேர்ந்த பி. துரைராசா (வயது 64) என்பவரே உயிரிழந்தவராவார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a comment