Home தாயகச் செய்திகள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் மூவருக்கு 90 நாட்கள் விளக்கமறியல்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் மூவருக்கு 90 நாட்கள் விளக்கமறியல்!

Share
WIDE SHOT two pairs of Black and Caucasian male hands resting on prison cell bars
Share

இலங்கையில் நடந்த குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு, அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு இன்று ( 3) கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் தெரிவித்தது.

இந்தியாவினால் நாடு கடத்தப்பட்ட பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட, ஜீவராஜா சுஜீபன், இளங்கோ இசையழகன் மற்றும் யோகராஜா ஆகியோரே இவ்வாறு தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

அண்மையில் வல்வெட்டித்துறைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் தொடர்பிலும் இந்த மூன்று சந்தேக நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் எதிர்வரும் தவணையில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...