படைப்பாளர் ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “ முட்காட்டுப் பூ” நாவல் வெளியீட்டு நிகழ்வு 07. 07. 2025 அன்று கனடாவில் நடைபெற்றது.
நிகழ்விற்கான ஆதரவினை கனேடியத் தமிழ்வானொலி மேற்கொண்டிருந்தது.
சுடரேற்றலை தொடர்ந்து கனேடிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்தை கரிசா துஷ்யந்தன், பவிசா துஸ்யந்தன் சகோதரிகள் இசைத்தனர். அடுத்து தலைமையுரை இடம்பெற்றது.
அறிமுக உரையை ஊடகவியலாளர்திருமதி சிவவதனி பிரபாகரன் நிகழ்த் , நாவலின் வெளியீட்டுரையை திருமதி.கலாநிதி குலமோகன் ஆசிரியை ஆற்றினார்.
மதிப்பீட்டுரையை ஊடகவியலாளர் திருமதி சக்தி சபாரட்ணம் நிகழ்த்தினார். ஆய்வுரைகளை தமிழ் ஆசிரியை திருமதி வனிதா இராஜேந்திரம், ஊடகவியலாளரும் ஆசிரியருமான கஜரூபன் குகதாசன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
முட்காட்டுப் பூவை நூலாசிரியர் வெளியிட்டு வைக்க முதற் சுவடியை செயற்பாட்டாளர் மயில்வாகனம் யோகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.
சிறப்பு பிரதிகளை அனுசரணையாளர் விக்கி சீவரத்தினம் பெற்றுக்கொள்ள தொடர்ந்து கனடா தமிழ் கல்லூரி சார்பாக மனோகரி தயானந்தன், இளையோர் அமைப்பு சார்பாக யோகித்தா பிரதீபன், அயுசன் தவசீலனும், கனேடியத்தமிழ் வானொலி சார்பாக அழகனும் பெற்றுக்கொண்டனர்.
இலக்கிய ஆர்வலர்கள், நூலாசிரியரின் பால்யநண்பர்கள், ஊரவர்கள் உறவினரகள் நூலைப் பெற்றுக்கொண்டார்கள்.
நன்றியுரையையும் ஏற்புரையையும் நூலாசிரியர் வழங்கினார்.












Leave a comment