Home தென்னிலங்கைச் செய்திகள் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு  நாம் சதி செய்யவில்லை – எதிரணி தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு  நாம் சதி செய்யவில்லை – எதிரணி தெரிவிப்பு!

Share
Share

“ஆட்சியைக் கவிழ்ப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித சூழ்ச்சியும் செய்யவில்லை” – என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் கூறியதவாது:-

“இந்த அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அந்தப் பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது. நாம் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சூழ்ச்சி செய்யவில்லை. எனவே, சிறுபிள்ளைத்தனமான அறிவிப்புகளை விடுப்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிறுத்த வேண்டும்.

செய்ய முடியும் என உறுதியளித்தே அநுர தரப்பினர் ஆட்சிக்கு வந்தார்கள். எனவே, உறுதிமொழிகளை நிறைவேற்றிக் காட்ட வேண்டும். அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் வரை நாம் அரசைப் பாதுகாப்போம்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித குழப்பமும் இல்லை.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...