“தேசிய மக்கள் சக்தி அரசின் பயணம் தவறெனில், அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களே கடந்துள்ளன. எனவே, அரசின் பயணம் சரியா அல்லது தவறா என்பதை ஒன்றரை வருடங்கள் சென்ற பின்னரே அறியக்கூடியதாக – உணரக்கூடியதாக இருக்கும்.
பயணம் சரியெனில் மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள். தவறான பயணமெனில் மக்கள் எதிர்ப்பை வெளியிடுவார்கள்.
நாட்டில் இன்னமும் உரிய மாற்றம் இடம்பெறவில்லை என்றே நானும் கருதுகின்றேன். பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. மக்களுக்கு வாழ்வதற்கு கஷ்டமாக உள்ளது.
அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் உரிய மதிப்பாய்வின் பின்னரே அது பற்றி கருத்து வெளியிட முடியும்.” – என்றார்.
Leave a comment