அமெரிக்க நன்கொடையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை இலங்கைக்கு வழங்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஒப்புக்கொண்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படும் மருந்துகளின் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான விசேடத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் மூலம் நாட்டிற்கு அத்தியாவசிய மருந்துகளைப் பெறுவதற்கு விசேடத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
Leave a comment