Home தென்னிலங்கைச் செய்திகள் அடுத்த வருட முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை அநுர அரசு நடத்த வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அடுத்த வருட முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை அநுர அரசு நடத்த வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து!

Share
Share

“ஆளுநர்கள் ஊடாக மாகாண சபைகளை ஆள்வது தவறாகும். எனவே, அடுத்த வருட முற்பகுதியில் அநுர அரசு தேர்தலை நடத்த வேண்டும்.” இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு 5 வருடங்கள் போதாது, 15 வருடங்கள் தேவை என்று சீனத் தலைவர்கள் கூறினார்கள் என ஜே.வி.பின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார். 15 வருடங்கள் ஆள வேண்டுமெனில் அதற்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் மக்கள் எந்த நிலைப்பாட்டில் உள்ளனர் என்பது இந்த அரசுக்குத் தெரியவரும். எனவே, அடுத்த வருட முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அநுர அரசுக்குச் சவால் விடுக்கின்றோம்.

மாகாண சபை முறைமை என்பது அரசமைப்பின் ஓர் அங்கமாகும். எனவே, அந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே வடக்கு மற்றும் தெற்கு மக்களின் கோரிக்கையாக உள்ளது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

துப்பாக்கிச் சூடுகளால் இவ்வருடம் இதுவரை 44 பேர் மரணம்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் 82 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார்...

விமலை இன்று3 மணிநேரம் துருவிய சி.ஐ.டி.!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்...

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை – அரசாங்கம்!

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு...

லொகான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்த காலமானார்....